/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 21, 2025 11:05 PM

கடலுார்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் மகேஷ் பிரபு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தண்டபாணி, முத்துசாமி முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் குளோப், மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
பள்ளி துாய்மை பணியாளர்கள், தற்காலிக மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஊக்குனர்களுக்கு மார்ச் 2025 வரை நிலுவையின்றி முழு ஊதியத்தை வழங்க வேண்டும்.
சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் கணினி ஆப்ரேட்டர்களுக்கு 20,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.