/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 13, 2024 06:41 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளி ஐந்தாம் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி முதல்வர் சுகிர்தாதாமஸ், தாளாளர் தீபக்தாமஸ் தலைமை தாங்கினர். தமிழாசிரியர் பாக்கியசாமி வரவேற்றார். துணை முதல்வர் ரம்யா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், தேசிய விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர் விஜய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, படிப்பில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், கேடயம் வழங்கி பாராட்டினார்.
லயன் சங்க நிர்வாகி மணிமாறன் சிறப்புரையாற்றினார்.
மாணவிகள் அறிவுடைமலர், நிஷாந்தினி, நித்தியஸ்ரீ ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
ஆசிரியர் ஆரோக்கிய கிரேஸி நன்றி கூறினார்.

