/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனிப்பிரிவு காவலருக்கு எஸ்.பி.,பாராட்டு
/
தனிப்பிரிவு காவலருக்கு எஸ்.பி.,பாராட்டு
ADDED : மே 22, 2025 11:35 PM

கடலுார்: ரெட்டிச்சாவடியில் கொலை நோக்கத்தில் பதுங்கியிருந்தவர்களை கண்டறிந்து, கைது செய்து குற்றத்தை தடுக்க பணியாற்றிய தனிப்பிரிவு போலீசுக்கு எஸ்.பி.,பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலத்தில் கடந்த 2005ல் நடந்த அதே பகுதியைச் சேரந்த கீழ்குமாரமங்கம் சதாசிவம் என்பவர் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் 8 பேர் ஆயுதங்களுடன் கடந்த 14ம் தேதி பதுங்கியிருந்தனர்.
தனிப்பிரிவு போலீஸ் கனகராஜ் அளித்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து செயல்பட்டு 8 பேரையும் ஆயுதங்களுடன் கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு, குற்றச்செயலை தடுத்த தனிப்பிரிவு போலீஸ் கனகராஜை, எஸ்.பி.,ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.