/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி; சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சீர்வரிசை வழங்கினார்

ADDED : மார் 23, 2025 11:20 PM

நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
என்.எல்.சி., ஆர்ச்கேட் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி பேசியதாவது:
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பான முறையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம், அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து, அங்கு வழங்கப்படும் சத்துணவு மாவு பெற்று பயனடையவும்.
மாதந்தோறும் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், குழந்தை பிறந்தவுடன் குழந்தைகளுக்கு முறையான தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும். 3 வயது முதல் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்த்து முன் பருவ கல்வி பயில பெற்றோர்கள் தயார்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு சத்தான ஆரோக்கியமான உணவினை வழங்கி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் முயற்சி செய்வோம்' என்றார்.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பவானி உட்பட பலர் பங்கேற்றனர்.