/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதி திராவிடர் குடியிருப்பில் சமுதாயக்கூடம் வேண்டும் சட்டசபையில் சபா ராஜேந்திரன் கோரிக்கை
/
ஆதி திராவிடர் குடியிருப்பில் சமுதாயக்கூடம் வேண்டும் சட்டசபையில் சபா ராஜேந்திரன் கோரிக்கை
ஆதி திராவிடர் குடியிருப்பில் சமுதாயக்கூடம் வேண்டும் சட்டசபையில் சபா ராஜேந்திரன் கோரிக்கை
ஆதி திராவிடர் குடியிருப்பில் சமுதாயக்கூடம் வேண்டும் சட்டசபையில் சபா ராஜேந்திரன் கோரிக்கை
ADDED : ஜன 11, 2025 04:56 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட மாளிகம்பட்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சமுதாயக்கூடம் கட்டிதர வேண்டும் என சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த கேள்வி - பதில் நிகழ்வில் ; சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நெய்வேலி தொகுதி மாளிகம்பட்டு ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட ஆரசு ஆவண செய்யுமா என்ற கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், மாளிகம்பட்டு பகுதியில் 400 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சுற்றியுள்ள தாழம்பட்டு, பனிக்கன்குப்பம் ஆகிய கிராமங்களில் 250 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
மாளிகம்பட்டு வருவாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான நத்தம் இடம் உள்ளது. இந்த இடத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு துறையின் நிதி நிலைமைக்கேற்ப பரிசீலிக்கப்படும் என்றார். அதனை தொடர்ந்து சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில்.
இதே கிராமங்களில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாகவும், தலைமுறைகள் தாண்டி அதே பகுதியில் வசித்து வரும் மக்களுடைய வேண்டுகோளுக்கிணங்க, வீட்டு மனைகள் தேவைப்படுகிறது.
எனவே புதிய நிலங்களை ஆர்ஜிதம் செய்து ஆதி திராவிடர் மக்களுக்கு புதிய வீட்டு மனைகள் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இக்கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்., கடலுார் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மக்களுக்கு 14 ஆயிரத்து 115 வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக, பட்டா கோருபவர்களுக்கு நில எடுப்பு செய்த பிறகு, வீட்ட மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.