/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதுகாப்பான பஸ் இயக்க விழிப்புணர்வு கூட்டம்
/
பாதுகாப்பான பஸ் இயக்க விழிப்புணர்வு கூட்டம்
ADDED : டிச 14, 2025 06:32 AM

கடலுார்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் கோட்டம், கடலுார் மண்டலம் சார்பில் பாதுகாப்பான பஸ் இயக்கம் குறித்து சிறப்பு விழிப்புணர்வு கூட்டம், கடலுார் கிளை வளாகத்தில் நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக பொதுமேலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., தமிழினியன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதில், எஸ்.பி.,ஜெயக்குமார் பேசுகையில், 'பஸ்களால் ஏற்படும் விபத்துகள் 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களால், 60 சதவீத விபத்துகள் ஏற்படுகிறது.
ஹெல்மெட் அணியாமல் செல்வதே பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்புக்கு காரணம். விதிகளை சரியாக பின்பற்றினாலே, விபத்துகள் குறைந்து விடும். கடலுார் விபத்து குறைவான மாவட்டமாக மாற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை,' என்றார்.
போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் பாண்டியன் பேசுகையில், 'ஓட்டுனர்கள் பஸ்களை இயக்கும்போது கண்டிப்பாக மொபைல் போன் பேசக்கூடாது. பலர் ஹெட்போன் போட்டுக்கொண்டு பேசுகின்றனர். டிரைவர் சீட்டில் அமர்ந்துவிட்டால் பஸ்சில் உங்களை நம்பி ஏறியுள்ள 54 பேரின் குடும்பத்தையும் நினைத்துப்பார்த்து கவனச்சிதறல் இல்லாமல் ஓட்ட வேண்டும்,' என்றார்.
தொடர்ந்து விபத்து தொடர்பாக, விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மண்டல அலுவலர்கள், கடலுார் மண்டல கிளை மேலாளர்கள், ஓட்டுனர் ஆசிரியர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்டோர், பாதுகாப்பான பஸ் இயக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

