ADDED : பிப் 01, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; ஊ.கொளப்பாக்கம் ரேஷன் கடையில்விற்பனையாளர் இல்லாமல், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த ஊ.கொளப்பாக்கம் கிராமத்தில், இங்குள்ளரேஷன் கடை மூலம் பொது மக்களுக்கு பொது வினியோக திட்டப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால்,இங்கு விற்பனையாளர்இல்லாமல், அரசக்குழி ரேஷன் கடை பணியாளர் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதனால் குறித்த நேரத்தில் பொருட்களை வழங்க முடியாமலும், வாங்க வரும் கிராம மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. தற்காலிக பணியாளர் ஒருவர் எடைபோட்டு பொருட்களை வழங்கி வருகிறார்.
எனவே, ஊ.கொளப்பாக்கம் ரேஷன் கடைக்கு நேரடியாகவிற்பனையாளரைநியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.