/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சலுான் கடைக்காரர் வெட்டி கொலை சிதம்பரத்தில் பயங்கரம்: 2 பேர் கைது
/
சலுான் கடைக்காரர் வெட்டி கொலை சிதம்பரத்தில் பயங்கரம்: 2 பேர் கைது
சலுான் கடைக்காரர் வெட்டி கொலை சிதம்பரத்தில் பயங்கரம்: 2 பேர் கைது
சலுான் கடைக்காரர் வெட்டி கொலை சிதம்பரத்தில் பயங்கரம்: 2 பேர் கைது
ADDED : மே 24, 2025 04:19 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், சலுான் கடைக்காரரை வெட்டி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர், மேல்கரை வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்,38; சிதம்பரம் கனகசபை நகரில் சலுான் கடை நடத்தி வந்தார். திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும், 4 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
காளிதாஸ், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் சலுானை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்ல தயாரானார். அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், கடைக்குள் புகுந்து காளிதாசை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
தகலறிந்த டி.எஸ்.பி., லாமேக், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காளிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது, காளிதாஸ் கடையில் வேலை பார்த்த அவரது உறவினரான புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முருகன் மகன் மணி (எ) வேல்மணி, 23;என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதையடுத்து, சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் நண்பருடன் பதுங்கியிருந்த வேல்மணியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், காளிதாஸ் சலுானில் கடந்த ஓராண்டாக வேலைபார்த்த வந்த வேல்மணி, அவரது வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
அப்போது, காளிதாஸ் உறவினர் மகளுக்கும் வேல்மணிக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை காளிதாஸ் கண்டித்ததுடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்மணி, காளிதாசை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தனது நண்பரான சிதம்பரம், கோவிந்தசாமி தெரு அய்யப்பன் மகன் விக்னேஷ், 21; என்பவருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு வெட்டி கொலை செய்துள்ளார்.
அதையடுத்து, வேல்மணி, விக்னேஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.