/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பா நெல் சாகுபடி ;வேளாண் அதிகாரி ஆய்வு
/
சம்பா நெல் சாகுபடி ;வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : நவ 12, 2024 08:05 PM

சிதம்பரம் ; குமராட்சி வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி வயல்களைவேளாண்மை கூடுதல் இயக்குநர் வெங்கட்ராமன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
குமராட்சி வட்டாரத்தில் சம்பா நெல் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாகுபடி வயல்களை வேளாண் கூடுதல் இயக்குநர் வெங்கட்ராமன், இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் ஆகியோர்நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அதில், மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி, அதன் செயல்முறை மற்றும் பயன்பாடு குறித்தும், தற்போது வேளாண் திட்டங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் செயலாக்கம் குறித்தும், பயிர் காப்பீடு திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, குமராட்சி மேற்கு கிராமத்தில், பி.பீ.டி., 5204, செயல் விளக்கத்திடல் ஆய்வு மேற்கொண்டு திட்ட பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தனர். வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள், மின்னணு முறையில் பயிர் கணக்கெடுப்பு பதிவேற்றம் மற்றும் செயல்முறை மற்றும் அதன் பயன்பாடு குறித்த ஆலோசனை வழங்கினர்.
ஆய்வின்போது கடலூர் வேளாண் துணை இயக்குநர் செல்வம், வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்வேல் , தொழில்நுட்ப வல்லுநர் புவனா, வேளாண அலுவலர் சிந்துஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.