/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் பகுதியில் கனமழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள்
/
பெண்ணாடம் பகுதியில் கனமழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள்
பெண்ணாடம் பகுதியில் கனமழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள்
பெண்ணாடம் பகுதியில் கனமழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள்
ADDED : டிச 03, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: தொடர் மழை காரணமாக பெண்ணாடம் பகுதியில் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், நந்திமங்கலம், கோனுார், வடகரை, அரியராவி, மாளிகைக்கோட்டம், இறையூர், கொத்தட்டை, அருகேரி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா நெற் பயிர்கள், போதிய வடிகால் வசதியின்றி நீரில் மூழ்கின.
இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.