/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சப்த விநாயகர் கோவிலில் நாளை சம்வத்ஸராபிஷேக விழா
/
சப்த விநாயகர் கோவிலில் நாளை சம்வத்ஸராபிஷேக விழா
ADDED : ஜூலை 05, 2025 03:20 AM
கடலுார்: நெய்வேலி ஆர்ச்கேட் சப்த விநாயகர் கோவிலில், நாளை சம்வத்ஸராபிஷேக விழா நடக்கிறது.
நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள அண்ணா கிராமத்தில் சப்த விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஏழு விநாயகர் சுவாமி அருள்பாலித்து வருகின்றனர்.
சப்த விநாயகர் மற்றும் மகா பெரியவர் விக்ரகம் அமைந்துள்ள இக்கோவில் காஞ்சி மடம் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (5ம் தேதி) காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், சுயம்வரகலாபார்வதி ஹோமம், சந்தான கோபால கிருஷ்ணன் ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
நாளை 6ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, ஆஜ்ய ஹோமம், ஷண்ணவதி திரவிய ஹோமம், மூல மந்திர ஹோமம், மாலா மந்திர ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
10:00 மணிக்கு சப்த விநாயகர் மகா பெரியவருக்கு கலசாபிஷேகம் அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், மாலை 6:30 மணிக்கு சப்த விநாயகருக்கு திரிசதி அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சப்த விநாயகர் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.