/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்றில் மணல் கொள்ளை: ஆளும் கட்சியினர்
/
வெள்ளாற்றில் மணல் கொள்ளை: ஆளும் கட்சியினர்
ADDED : அக் 23, 2024 06:22 AM

விருத்தாசலம் சரகத்திற்கு உட்பட்ட ஒரு போலீஸ் ஸ்டேஷன் எல்லை வழியாக வெள்ளாறு செல்கிறது. இந்த ஆற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு, டாரஸ் லாரியில் கடத்தல் நடக்கிறது.
மேலும், பகல் நேரங்களில், சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தலில் ஆளுங்கட்சி நபர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இந்த மணல் கடத்தல் நடக்கும் வெள்ளாற்று பகுதி, இரண்டு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு இடையே உள்ளதால், இரண்டு போலீஸ் நிலைய போலீசாரும், நமக்கேன் வம்பு என்பதை போல் மணல் கடத்தலை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
தினசரி இரவு நேரங்களில் வெள்ளாற்றில் இருந்து டாரஸ் லாரிகளில் மணல் கடத்திச் செல்வது வாடிக்கையாக உள்ளது. மணல் கடத்தலில் ஆளூம் கட்சியினரின் தலையீடு உள்ளதால், நமக்கேன் வம்பு என போலீசாரும் கமுக்கமாக உள்ளனர்.