UPDATED : செப் 29, 2026 08:32 PM
ADDED : செப் 29, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி:மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பெர்னாண்டஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் பண்ருட்டி அடுத்த திருவதிகையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் வடக்கு மாடவீதியில் வந்த டி.என் 88 எம் 0661 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 3 யூனிட் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.
அதன்பேரில் அதிகாரிகள், லாரியை பறிமுதல் செய்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டம், ஏ.கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்த தெய்வகண்ணன்,33;என்பவரை கைது செய்தனர்.
