ADDED : நவ 22, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஆலோடிசாப் தர்காவில் சந்தனக்கூடு விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ஆலோடி சாப் தர்காவில், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சந்தனக்கூடு விழா நடப்பது வழக்கம்.
இந்தாண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அதையொட்டி காலை 6:00 மணிக்கு சிறப்பு தொழுகை, 7:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
சிறப்பு விழாவான சந்தனக்கூடு விழா வரும், 27ம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. அதையொட்டி அன்று இரவு சிறப்பு தொழுகையும், 28ம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு 'உரூஸ்' எனும் சந்தனம் பூசும் சந்தனக்கூடு விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் ஊர் ஜமாத்தார்கள் செய்கின்றனர்.

