ADDED : நவ 22, 2025 05:39 AM

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் அய்யர் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் பிரதீப் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பழக்கம் தவிர்த்தல், தடுத்தல் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும், சாலை விதிகளை மாணவர்கள் கடைபிடிப்பது, சைபர் க்ரைம், போக்சோ சட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற, 9ம் வகுப்பு மாணவி தீபிகாவுக்கு பதக்கம், சான்றிதழ், வழங்கப் பட்டது.
கலை திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மற்ற மாணவர்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன், என்.எஸ்.எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் சுந்தர்ராஜன் செய்திருந்தனர்.

