/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுந்தரேஸ்வரர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
/
சுந்தரேஸ்வரர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED : அக் 11, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி சுந்தரேஸ்வரர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையில் ஒரே நாளில் கிருத்திகை மற்றும் சங்கடரஹர சதுர்த்தி விழா வந்தது.
அதனை முன்னிட்டு நேற்று மாலை கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பல்வேறு பூஜைகளைத்தொடர்ந்து அபிேஷக ஆராதனையும், இரவு சங்கடஹர சதுரத்தியை முன்னிட்டு விநாயகருக்கு பல்வேறு அபிேஷகமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தை முன்னிட்டு விேஷஷ ஆராதனை நிகழ்ச்சியும் நடந்தது.