/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்கள் முற்றுகை
/
நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்கள் முற்றுகை
நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்கள் முற்றுகை
நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்கள் முற்றுகை
ADDED : ஏப் 22, 2025 06:52 AM

திட்டக்குடி; சம்பளம் வழங்கக்கோரி, நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த துப்புரவு ஊழியர்களாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாத சம்பளம் வழங்கவில்லை.
இதை கண்டித்து நேற்று காலை 7:00 மணிக்கு, நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த நகராட்சி ஆணையர் முரளிதரன் பேச்சு வார்த்தை நடத்தி, முதல் தவணை ஒவ்வொரு மாதம் 5ம் தேதியும், 2வது தவணை ஒப்பந்ததாரர் பில் கொடுத்த 3 அல்லது 5ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதையேற்று, 8:30 மணிக்கு துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.