/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சன்னியாசியப்பர், மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
சன்னியாசியப்பர், மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : அக் 21, 2024 06:43 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த அகரஆலம்பாடி கிராமத்தில் சன்னியாசியப்பர், செல்வகணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
கடந்த 18ம் தேதி காலை 10.00 மணிக்குமேல் அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புண்யா வஜனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், கடஸ்தாபனம், கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை ஆரம்பம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 19ம் தேதி காலை 10.00 மணிக்குமேல் இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், ஹோமங்கள் தீபாராதனை நடந்தது.
மாலை 5.00 மணிக்கு மேல், மிருத்சங்கிரஹணம், அங்குரார்பணம், நவக்கிரக ஹோமம், மூர்த்தி ஹோமம், தசா ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்குமேல் மூன்றாம்கால யாக பூஜை ஆரம்பம், பிம்மசுத்தி, நாடிசந்தனம், கோபூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி மஹா தீபாராதனை நடந்தது.
அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்பாடாகி 8.40 மணிக்கு சன்னியாசியப்பர், 9.00 மணிக்கு செல்வகணபதி, மாரியம்மன் கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது.