/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோமங்கலம் ஊராட்சியில் மரக்கன்று உற்பத்தி தீவிரம்
/
கோமங்கலம் ஊராட்சியில் மரக்கன்று உற்பத்தி தீவிரம்
ADDED : பிப் 21, 2024 08:03 AM

விருத்தாசலம் : கோமங்கலம் ஊராட்சியில் நாற்றுப்பண்ணை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் மூலம் கிராமங்களில் பசுமைப் போர்வையை உருவாக்கும் நோக்கில், இடவசதியுள்ள ஊராட்சிகளில் நாற்றுப்பண்ணை திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.
இவற்றில் மரக்கன்றுகள் வளர்த்து குளம், குட்டை, ஓடைகளில் செடிகளை வளர்த்து பராமரித்து பசுமையாக பராமரிக்க வேண்டும். இப்பணியில் நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அதன்படி, விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சியில் செயல்படும் பண்ணையில் புங்கன், வேம்பு, இளுப்பை, முருங்கை உள்ளிட்ட கன்றுகள், செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
நன்கு வளர்ந்த கன்றுகளை அருகில் உள்ள கிராமங்களில் தேவைப்படுவோர் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதனை, ஊராட்சித் தலைவர் வீரபாண்டியன் பார்வையிட்டு, களைகளை அகற்றி, தரமாக உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

