/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி சாதனை
/
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : மே 10, 2025 12:16 AM

கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஷிதா 600க்கு 589 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர்கள் மதிவாணன் 580 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், அப்துல் அஸூஸ் 573 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
கணித பாடத்தில் மாணவி ரஷிதா, கணினி பயன்பாடு மற்றும் வணிகவியல் பாடத்தில் மதிவாணன், கணினி பயன்பாடு பாடத்தில் தர்ஷன், ஹரிதரராஜ், மர்ஜூர் நைல், கணினி அறிவியல் பாடத்தில் தீபனா ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளி தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி சிவக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ் பாராட்டினர். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம், ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.