/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2024 09:09 PM

கடலுார் ; கடலுாரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மச்சேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் சுந்தரமூர்த்தி, ஷீலா அன்பழகி, துணை செயலாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாவாடை கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் துவக்க உரையாற்றினார்.
இதில், குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் நாகம்மாள், செயலாளர் சின்னசாமி மற்றும் பழனி, காசிநாதன், அரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் மனோகரன் நிறைவுரையாற்றினார்.