/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்
/
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : மார் 19, 2025 09:33 PM

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி வினாயகா பள்ளியின் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, பெண்கள் மட்டும் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
ஆவினங்குடி விநாயகா பள்ளி முதல்வர் மங்கையர்க்கரசி , மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி வரவேற்றார்.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து கூடலுாரிலிருந்து ஆவினங்குடி வரை நடந்த பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி., மோகன் பரிசு வழங்கினார். பள்ளி துணை முதல்வர் மகேஸ்வரி, பசுமைத்துாண்கள் அறிவழகன், டாக்டர் மகேஸ்வரி, வினா பிரதீபா ராஜா, டாக்டர்கள் ராதா நிஷாந்தி, சரண்யா, சங்கீதா ஆகியோர், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர்.