/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் பணியில் கூடுதல் கவனம் எஸ்.பி., ராஜாராம் அறிவுரை
/
தேர்தல் பணியில் கூடுதல் கவனம் எஸ்.பி., ராஜாராம் அறிவுரை
தேர்தல் பணியில் கூடுதல் கவனம் எஸ்.பி., ராஜாராம் அறிவுரை
தேர்தல் பணியில் கூடுதல் கவனம் எஸ்.பி., ராஜாராம் அறிவுரை
ADDED : மார் 10, 2024 06:15 AM

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள மொபைல் அலுவலர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கடலுார் காவலர் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், எஸ்.பி., ராஜாராம் தலைமை தாங்கி பேசுகையில், 'அனைத்து மொபைல் பார்ட்டி அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று உரிய வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் குறைபாடு இருந்தால் வி.ஏ.ஓ., விடம் கூறி சரி செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி மைய தேர்தல் அலுவலர், வி.ஏ.ஓ., பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர் மற்றும் மொபைல் எண்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
வன்முறை ஏற்படக் கூடிய ஓட்டுச்சாவடி மையங்களை முன்கூட்டியே கண்டறிந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் சம்பந்தமாக பிரச்னை ஏற்படும் இடங்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், ஏ.எஸ்.பி.,க்கள் ரகுபதி, ரவீந்திர குமார் குப்தா (பயிற்சி), டி.எஸ்.பி.,க்கள் பிரபு, சபியுல்லா, ரூபன்குமார், நாகராஜ், ஆரோக்கியராஜ், தேவராஜ், பழனி, சவுமியா உட்பட பலர் பங்கேற்றனர்.

