
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கீழ்புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் லலிதா பக்கிரிசாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மெகருன்னிசா வரவேற்றார். உதவி ஆசிரியர் மகாலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். ஊராட்சி துணைத் தலைவர் பந்தளராணி, வார்டு உறுப்பினர் பேபி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அருள்செல்வி முன்னிலை வகித்தனர்.
வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் பரமசிவம், ஸ்ரீமுஷ்ணம் ரோட்டரி கிளப் தலைவர் ேஷக் சேட் ஆகியோர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சி நடந்தது.