ADDED : நவ 24, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், : பெரியப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய பள்ளி கட்டடத் திறப்பு விழா நடந்தது.
கரிக்குப்பம் ஐ.எல் அண்ட் எப்.எஸ் தனியார் கம்பெனி சார்பில் பெரியப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.29 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார்.
ஐ.எல் அண்ட் எப்.எஸ் அதிகாரிகள் இளவரசன், சரவணன், அரிசங்கர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஐ.எல் அண்ட் எப்.எஸ் நிறுவன அதிகாரி குகன் பங்கேற்று புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார். பாலமுருகன், ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி ரோகபரணி, ஊராட்சி தலைவர் அர்ஜூனன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

