/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துவக்கப் பள்ளியில் பள்ளித் தோட்டம்
/
துவக்கப் பள்ளியில் பள்ளித் தோட்டம்
ADDED : ஜூலை 24, 2025 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரி அருகே சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளித் தோட்டம் துவக்க விழா நடந்தது.
உதவி தலைமை ஆசிரியை அகிலா வரவேற்றார். அரசு பள்ளிகளை ஆதரிப்போம் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், ஊராட்சி செயலர் மகேஸ்வரி, அமைப்பாளர் வேம்பு முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் அருணாசலம் பள்ளித்தோட்டத்தை துவக்கி வைத்தார். பின், மாணவர்களின் பெற்றோருக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.