/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலி
/
பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலி
ADDED : நவ 27, 2024 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:கடலுார், தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் கைலாஷ், 16; கடலுாரில் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு தனியார் பஸ்சில் முன்பக்க படியில் நின்று பயணித்தார்.
ஜட்ஜ் பங்களா சாலையில் வந்த போது, கைலாஷ் திடீரென பஸ்சில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். அப்போது, பஸ்சின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். கடலுார், புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.