/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
/
பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : ஏப் 27, 2025 06:54 AM
சேத்தியாத்தோப்பு: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்,23; திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு ராங்கால் மூலமாக காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 16 வயது சிறுமியுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மணிகண்டன், அடிக்கடி மாணவியின் ஊருக்கு வந்து அவருடன் சுற்றித் திரிந்தார். இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன் மாணவிக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர், மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

