/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 30, 2025 11:20 PM

கடலுார்:  கடலுார் துறைமுகம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டெக்டோபியா 2025, அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளியின் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், நிர்வாக செயல்அலுவலர் லட்சுமி சிவகுமார், பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் வரவேற்றார்.
கடலுார் புனித வளனார் கலை, அறிவியல் கல்லுாரி வேதியியல் துறை தலைவர் ஆன்டனி சந்தோஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு, விக்ரம் லாண்டர் மாதிரி, உயிர்நுட்பவியல், கணிதம் மற்றும் சமூகஅறிவியல் தலைப்புகளில் மாணவர்கள்  கண்காட்சி மாதிரிகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

