ADDED : ஜன 08, 2026 06:12 AM

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டில் உள்ள ஸ்ரீ வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ.,பள்ளியில் சென்னை விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் பள்ளிகள் அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது.
அதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் அறிவியல் செய்முறைகளை காட்சிப்படுத்தினர்.
புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பார்வைக்கு வைத்திருந்தனர். கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பெற்றோர் உட்பட ஏராளமானோர் பார்வையிட்டனர்.
விழாவில் உயிரியியல் மருத்துவ துறையின் இணை பேராசிரியர் பிரசாத் பங்கேற்று குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர்கள் சுபத்ரா, ராஜசேகர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கண்காட்சியில் இடம்பெற்றிருந்த மாணவர்களின் சிறந்த அறிவியல் செய்முறைகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

