
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஆர்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
தாளாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் கண்காட்சியை துவக்கி வைத்தார். நகர பகுதியில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிபடுத்தியிருந்தனர்.
தண்ணீர், மின்சாரம் சேமிப்பு, காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் தயாரித்தல், பிளாஸ்டிக் பைகளின் தீமைகள் போன்றவற்றை காட்சிபடுத்தி மாணவர்கள் நேர்த்தியாக பார்வையாளர்களுக்கு விளக்கினர்.
கண்காட்சியில் உதயகுமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.