
விருத்தாசலம்: விருத்தாசலம் கே.எஸ். ஆர். ஹைடெக் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார்.
செயலாளர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வி துறை செயலர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களின் படைப்பு திறனை பாராட்டினார். அதன்பின், கண்காட்சியில் பங்கேற்று, சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில், பள்ளியின் இயக்குனர் ரஞ்சித், நிர்வாக அலுவலர் ஆனந்தராஜ், என்.எல்.சி., நிறுவன அதிகாரிகள் அருள், வெங்கடேசன், முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல், அறிவியல் திறன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பிரதிபலிக்கும் பல்வேறு மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.
பள்ளி முதல்வர் பெட்ரிஷியா செபஸ்டியன் நன்றி கூறினார்.

