/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளை அரசு பள்ளியில் விஞ்ஞானி திட்ட விழா
/
கிள்ளை அரசு பள்ளியில் விஞ்ஞானி திட்ட விழா
ADDED : ஜன 10, 2025 06:28 AM

கிள்ளை: கிள்ளையில், கலைஞர் நகர் மற்றும் எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 'ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி' திட்ட துவக்க விழா நடந்தது.
சப் கலெக்டர் ராஷ்மி ராணி தலைமை தாங்கினார். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தை, கடலுார் முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் துவக்கி வைத்தார். விழாவை, திட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயராணி தொகுத்து வழங்கினார்.
விழாவில், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் ஹரிஹரன், சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா, வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி, எம்.ஜி.ஆர்., நகர் கிராம தலைவர் செஞ்சி, தலைமை ஆசிரியர்கள் குமரவேல், உமா, பட்டதாரி ஆசிரியர் மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திட்ட இணைப்பாளர் ஹேமா செய்திருந்தார்.

