/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி., சியோன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
எஸ்.டி., சியோன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 19, 2024 05:41 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி., சியோன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், இணை இயக்குனர் தீபாசுஜின் தலைமை தாங்கினர். பள்ளியின் நிறுவனர் சாமுவேல் சுகிர்தசந்திரா, சாண்டிதேவ்பெல், கீரப்பாளையம் சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்ளவது, மாணவர்களுக்கு உறுதுணையாக ஆசிரியர்கள், பெற்றோர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.
மாணவ, மாணவிகளின் கலை, நடனம், சிலம்பம், காராத்தே, பேச்சுப் போட்டிகள், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ஆண்டனிராஜ் நன்றி கூறினார்.

