/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாடகை செலுத்தாத பூக்கடைக்கு 'சீல்½'
/
வாடகை செலுத்தாத பூக்கடைக்கு 'சீல்½'
ADDED : ஜன 31, 2025 11:00 PM
விருத்தாசலம்; விருத்தாசலம் பஸ் நிலையத்தில், நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பஸ் நிலைய வளாகத்தில் உள்ள 42 கடையில், ஏழுமலை என்பவருக்கு சொந்தமான பூ கடையில் இருந்து கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தப்படவில்லை.
இதையடுத்து கமிஷனர் பானுமதி, மேலாளர் ஹரிகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஷகிலா பானு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தனர்.
அதில், வாடகை செலுத்துவது குறித்து எந்தவித அறிகுறியும் இல்லாததால், கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும், இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் இன்று மாலைக்குள் வாடகை நிலுவையை செலுத்தி விடுவதாக உறுதியளித்ததன் பேரில், அவர்களை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் பஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது.