/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரி பாக்கி செலுத்தாத நிறுவனத்திற்கு சீல்
/
வரி பாக்கி செலுத்தாத நிறுவனத்திற்கு சீல்
ADDED : மார் 22, 2025 09:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,: கடலுாரில் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்ததாக நிதி நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடலுார் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வரி பாக்கி மற்றும் வாடகை பாக்கி வசூலிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
பாக்கி வைத்துள்ளவர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் கெடுபிடி வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுார் செம்மண்டலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம்,ரூ.86 ஆயிரத்து 600 சொத்து வரி பாக்கி வைத்துள்ளது.
நேற்று அந்நிறுவனத்திற்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள், அந்த நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.