/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலில் மாயமான மீனவர் 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
/
கடலில் மாயமான மீனவர் 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
ADDED : டிச 17, 2024 06:40 AM
கடலுார்; கடலுார் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரை தேடும் பணி இரண்டாம் நாளாக நீடித்தது.
கடலுார் அடுத்த சித்திரைப்பேட்டையை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் ஜெகன், 32; நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு, ஜானகிராமன், சேகர் ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
அப்போது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் ஜானகிராமன், சேகர் படகை பிடித்து தப்பினர். கடலில் விழுந்த ஜெகன் மாயமானார்.
இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல்படையினர் மற்றும் கிராமத்தினர் ஜெகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாயமான மீனவரை தேடும் பணியில், நேற்று இரண்டாம் நாளாக தொடர்ந்து ஈடுபட் டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சித்திரைப்பேட்டை கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.