/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பருவகால பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
பருவகால பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 13, 2026 05:34 AM

கடலுார்: நுகர்பொருள் வாணிப க ழக பருவ கால பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந் தது.
கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
வேலைவாய்ப்பு அலு வலகம் மூலம் பணியமர்த்தப்பட்ட பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொள்முதல் பணி இல்லாத காலங்களில் நிவாரணத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், நெல்கொள்முதல் நிலையங்களில் அவுட் சோர்ஸிங் முறையை திணிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

