/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பருவகால பணியாளர்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
/
பருவகால பணியாளர்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
ADDED : டிச 28, 2024 05:36 AM

விருத்தாசலம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் சார்பில் விருத்தாசலத்தில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுக்கப்பட்டது.
அதில், பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தாமதமாகி வருகிறது. பணி நிரந்தரத்தை விரைவு படுத்த வேண்டும்.
கொள்முதலில் என்.சி.சி.எப்., நிறுவனத்திடம் ஒப்படைப்பதை தடுக்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களின் வாழ்வாதார நலன்களை பாதுகாக்கும் வகையில் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பருவகால பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் சுரேஷ்குமார், ஜெயபாலன், சுந்தரபாண்டியன், வெங்கடேசன், வனப்பதாஸ், அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர் தம்பிதுரை உடனிருந்தனர்.

