/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவிலில் தங்கமாக மாறிய பித்தளை காசுகள் வெளிவராத 'ரகசியம்'
/
கோவிலில் தங்கமாக மாறிய பித்தளை காசுகள் வெளிவராத 'ரகசியம்'
கோவிலில் தங்கமாக மாறிய பித்தளை காசுகள் வெளிவராத 'ரகசியம்'
கோவிலில் தங்கமாக மாறிய பித்தளை காசுகள் வெளிவராத 'ரகசியம்'
ADDED : அக் 02, 2024 03:34 AM
மாவட்டத்தின் கடைக்கோடி போலீஸ் சப் டிவிஷனுக்குட்பட்ட கிராமத்தில், மாரியம்மன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த தங்க காசுகளை நகையாக செய்ய கிராம முக்கியஸ்தர்கள் முடிவு செய்து, நகை செய்யும் பத்தரிடம் எடுத்துச்சென்றனர். அவர் நகை செய்வதற்காக காசுகளை உருக்கியபோது, அவை பித்தளை என தெரிந்தது.
ஆண்டுக்காண்டு கோவில் பராமரிப்போர் மாற்றப்படும் நிலையில், யாருடைய கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருந்தபோது தங்க நகை, கவரிங்காக மாறியது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஊர் பஞ்சாயத்தில் பேசியும் முடிவு கிடைக்கவில்லை.
இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நேரில் சென்று விசாரித்தனர்.
இதனால், பிரச்னை பெரிதாகிவிடும் என்பதால், சம்மந்தப்பட்ட தரப்பு, தங்கக் காசுகளை திருப்பிக்கொடுத்து பிரச்னை பெரிதாகாமல் அமுக்கிவிட்டனர். ஆனால், இதுவரையில், தங்கக்காசு, பித்தளையான ரகசியம், ரகசியமாகவே இருந்து வருகிறது.