/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
' கோவில்களில் பாதுகாவலர் பணியிடம் '
/
' கோவில்களில் பாதுகாவலர் பணியிடம் '
ADDED : செப் 01, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : திருக்கோவில்களில் பாதுகாவலர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் 34 கோவில்களில் பாதுகாவலர் பணியிடம் காலியாக உள்ளது. தொகுப்பு ஊதியமாக 7,300 ரூபாய் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியில் சேர்ந்து பணியாற்ற விருப்பமுள்ள 62 வயது வரை உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142- 220732 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.