/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
/
பயிறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
பயிறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
பயிறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
ADDED : டிச 21, 2025 06:04 AM

விருத்தாசலம்: குமராட்சி அடுத்த வடமூர் கிராமத்தில் பயிறுவகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, பயிர் வகைபயிர்களில் விதை உற்பத்தி, சாகுபடி தொழில்நுட்பங்கள், நிலம் தயாரிப்பு, விதைநேர்த்தி செய்யும் முறை, புதிய ரகங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த களை நிர்வாகம், நுண்ணுாட்ட கலவையின் பயன்பாடு, மண் மற்றும் நீர் பரிசோதனை முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
இப்கோ உர நிறுவன மேலாளர் அருள்மணி பயிறு வகை பயிர்களுக்குக் கேற்ற அனைத்து வகையான பூச்சிகொல்லிகள் மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள் பற்றி விளக்கினார்.
மத்திய அரசால் வடமூர் கிராமம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, வேளாண் அறிவியல் நிலையம் மூலம் மாதிரி கிராம பயறுவகை செயல்விளக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் உளுந்து விதை வம்பன் 8, வம்பன் 10, இனக்கவர்ச்சி பொறி, வேப்ப எண்ணெய் கரைசல் உள்ளிட்டவைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
இதில், வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

