/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
/
விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஆக 11, 2025 07:15 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், வேர்க்கடலையில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, எண்ணெய்வித்து பயிர்களில் வேர்க்கடலை, எள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார்.
மேலும், களை மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, மதிப்புக்கூட்டுதல் பற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
நிலக்கடலையில் வி.ஆர்.ஐ., 10, ஊடு பயிர்சாகுபடி, விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், விதை நேர்த்தி, வேர்க்கடலையில் புதிய ரகங்கள், சாகுபடி குறித்தும் விளக்கினர்.
நுண்ணுயிரியல் பேராசிரியர் காயத்ரி உயிர் உரங்கள், அங்கக வேளாண்மை குறித்து பேசினார். இதில், வேளாண் விஞ்ஞானிகள் கண்ணன், சுகுமாறன், கலைச்செல்வி மற்றும் வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

