sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி பயிற்சி

/

 பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி பயிற்சி

 பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி பயிற்சி

 பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி பயிற்சி


ADDED : டிச 15, 2025 06:58 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கீரப்பாளையம் அடுத்த சிறுகாலுார் கிராமத்தில், பயறுவகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி நடந்தது.

மத்திய அரசால் சிறுகாலுார் கிராமம் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மாதிரி கிராம பயறுவகை செயல்விளக்கம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு, வேளாண் அறிவியல் நிலையம் மூலம் நடந்த பயிற்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார்.

அதில், பயறுவகை பயிர்களில் விதை உற்பத்தி, சாகுபடி தொழில்நுட்பங்கள், நிலம் தயாரிப்பு, விதை நேர்த்தி முறைகள், புதிய ரகங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த களை நிர்வாகம், நுண்ணுாட்ட கலவையின் பயன்பாடு, மண் மற்றும் நீர் பரிசோதனை முறை குறித்து பயிற்சி தரப்பட்டது.

மேலும், தனுகா நிறுவன அதிகாரி முனியன், பயறுவகை பயிர்களுக்கு ஏற்ற அனைத்து வகையான பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள் குறித்து விளக்கமளித்தார்.

பயிற்சியில், உளுந்து விதை வம்பன் 8, வம்பன் 10, பயறு ஒன்டர், இனக்கவர்ச்சிப் பொறி, வேப்ப எண்ணெய் கரைசல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

சிறுகாலுார் கிராம விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றனர்.






      Dinamalar
      Follow us