ADDED : அக் 14, 2024 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே ஆற்று மணல் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, எம்.பட்டி வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், ஆற்று மணலை கடத்திச் சென்றது தெரிந்தது.
இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் கலர்குப்பம் கொளஞ்சிநாதன் மகன் அன்பரசன், 24, என்பவரை கைது செய்தனர். டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.