/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சோமநாத சுவாமி கோவில் திருப்பணி குழு தலைவர் தேர்வு
/
சோமநாத சுவாமி கோவில் திருப்பணி குழு தலைவர் தேர்வு
ADDED : செப் 25, 2024 03:34 AM

பண்ருட்டி, : பண்ருட்டி சோம நாதசுவாமி கோவில் திருப் பணி குழு தலைவராக நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தேர்வு செய் யப்பட்டார்.
பண்ருட்டியில் 750 ஆண்டுகள் பழமையான சோமநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலவராக மனவாசங்கடந்த முனிவர் ஜீவசமாதி உள்ளது.
இக்கோவிலில் கடந்த ஜூலை 3 ம் தேதி, திருப்பணி துவங்கியது. கோவிலில் விநாயகர், சுப்ரமணியர் சுவாமி கோவில்களின் பீடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பணி விரைவுபடுத்துவது குறித்த2ம் கட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன், கவுன்சிலர்கள் சோழன், சண்முகவள்ளிபழனி, கதிர்காமன்,கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ரோட்டரி சங்க தலைவர் பாலமுருகன், திருப்பணிக்குழு கருணாகரன், சதிஷ்,கணேசன்,பொறியாளர் அருள், நகர தி.மு.க.,பொருளாளர் ராமலிங்கம், காங்.,நகர தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திருப்பணிகள் தொய்வின்றி விரைந்து நடத்துவது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் திருப்பணி குழு தலைவராக தேர்வு செய்வது, கூடுதல் உறுப்பினர்கள் சேர்ப்பதுஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.