ADDED : மே 14, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: பள்ளிகளில் பயிலும் மாணவ-, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர கடலுார் மாவட்ட அளவிலான போட்டி கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் நடந்தது.
இதன் அடுத்தகட்டமாக மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளுக்கான மாநில அளவிலான போட்டி கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
இதில் மல்யுத்தம் பிரிவில் 17 மாணவர்களும், டேக்வாண்டோ பிரிவில் 53 மாணவர்கள், 19 மாணவிகள் பங்கேற்றனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநிலத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெறுவார்கள். இத்தேர்வு கடலுார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ் குமார் முன்னிலையில் நடந்தது.