/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 21ம் தேதி வாலிபால் வீரர்கள் தேர்வு
/
கடலுாரில் 21ம் தேதி வாலிபால் வீரர்கள் தேர்வு
ADDED : ஜன 19, 2024 08:15 AM
கடலுார்: கடலுாரில் மாவட்ட வாலிபால் அணி வீரர்கள் தேர்வு 21ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு மாநில வாலிபால் கழகம் சார்பில் வேலுார் வி.ஐ.டி., பல்கலைக் கழக வளாகத்தில் மாநில அளவில் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாலிபால் போட்டி வரும் 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடக்கிறது.
இதில், பங்கேற்க உள்ள கடலுார் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 21ம் தேதி மதியம் 2:30 மணிக்கு நடக்கிறது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர் 1.1.2008 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் அசல் ஆதார் அட்டையுடன் தேர்வுக்குழுவிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். சீருடையுடன் வர வேண்டும்.
இத்தகவலை, மாவட்ட வாலிபால்கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

