/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபால் அணி வீரர்கள் தேர்வு கடலுாரில் 27ம் தேதி ஏற்பாடு
/
வாலிபால் அணி வீரர்கள் தேர்வு கடலுாரில் 27ம் தேதி ஏற்பாடு
வாலிபால் அணி வீரர்கள் தேர்வு கடலுாரில் 27ம் தேதி ஏற்பாடு
வாலிபால் அணி வீரர்கள் தேர்வு கடலுாரில் 27ம் தேதி ஏற்பாடு
ADDED : அக் 23, 2024 06:19 AM
கடலுார், : கடலுாரில் வாலிபால் அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் 27ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கடலுார் மாவட்ட வாலிபால் கழக செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலுார் மாவட்ட வாலிபால் கழகம் சார்பில் மாவட்ட அளவில் 23 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான அணி தேர்வு வரும் 27ம் தேதி அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. இதில், 1.1.2002 அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.
கடலுார் மாவட்டத்தினர் மட்டும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடலுார் மாவட்டத்தில் பணிபுரிந்தாலோ அல்லது கல்வி பயின்றாலோ அவர்கள் பணிபுரியும் துறை அலுவலர் மற்றும் கல்லுாரி முதல்வர்களிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
தகுதிக்கான வயது சான்றிதழை தேர்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் அல்லது 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மட்டுமே ஏற்கப்படும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு 5 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு நவ., 26ம் தேதி முதல், 6ம் தேதி வரை வேலுாரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

