/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கு
/
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : ஏப் 02, 2025 06:12 AM
கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினர். முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சமீபத்திய மேம்பாடுகளின் நுண்ணறி மின்வலை பற்றிய தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் மின்னணு மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் மங்கையர்க்கரசி, சிறப்புவிருந்தினராக பங்கேற்று நுண்ணறி மின்வலையின் எதிர்காலம் பற்றி பேசினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர் சிவசக்தி, துணை பேராசிரியர் ராஜராஜேஸ்வரி செய்திருந்தனர்.